Skip links

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனத்துடன் இணைந்து

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவானது பொலன்னறுவை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் உள்ளூராட்சி நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்காக, ‘சிறந்த சேவை வழங்களுக்கான வழிமுறை” எனும் தொனிப்பொருளின் கீழ் இரண்டு பயிற்சிப் பட்டறைகளை, 2024 ஏப்ரல் 05 மற்றும் 06 ஆகிய நாட்களில் மாவட்ட செயலகங்களில் வெற்றிகரமாக நடாத்தின.

பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம அலுவலர் அலுவலகங்கள் தொடர்பான முறைப்பாடுகளைக் குறைத்து, பொது மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில், உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் நடாத்தப்படும் ஒரு நாள் பயிற்சிப் பட்டறைகளின் ஒரு பகுதியாக இது நடைபெற்றது. இந்த செயலமர்வில், நேர்மைத்திறன், பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் வினைத்திறன் ஆகியவற்றைப் பேணுவதன் மூலம் பொதுச் சேவையை வழங்குவதன் முக்கியத்துவம் குறித்து அவர்களுக்கு எடுத்துக் காட்டப்பட்டது.

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் முன்னாள் செயலாளர் நீல் டி அல்விஸ் மற்றும் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உள்நாட்டலுவல்கள் பிரிவின் மேலதிக செயலாளர் (விசாரணை) தம்மிக முதுகல ஆகியோர் முக்கிய உரைகளை நிகழ்த்தினர். அத்துடன், தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பாக, TISL நிகழ்ச்சித்திட்ட அதிகாரி சகுந்தலா செனரத் உரையொன்றை நிகழ்த்தினார்.

Leave a comment

This website uses cookies to improve your web experience.