Skip links

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் நியமனத்தை எதிர்த்து TISL நிறுவனம் TISL நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

  • CIABOC இன் பணிப்பாளர் நாயகமாக கனிஷ்க விஜேரத்ன நியமிக்கப்பட்டமை ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் விதிகளை மீறும் செயல் என அடிப்படை உரிமைகள் மனுவில் வலியுறுத்துகிறது. 
  • இந்த நியமனம் தன்னிச்சையானது என்றும்நடைமுறை உத்தரவுக்கு எதிரானது என்றும் கூறப்படுகிறது. 
  • இந்த நியமனத்தை நீதிமன்றம் செல்லாது என அறிவிக்க வேண்டும்மேலும் விஜேரத்னவை பணிப்பாளர் நாயகம் பதவியில் இருந்து நீக்கி விசாரணை முடியும் வரை இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. 
  • தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள்கூட்டத்தின் நிமிடங்கள்தேர்வுக்கான காரணங்கள் ஆகியவற்றை அரசியலமைப்புப் பேரவை வெளியிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது. 

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக W. கனிஷ்க D. விஜேரத்னவை நியமித்ததை எதிர்த்து ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவை (SC FR 110/2024) தாக்கல் செய்துள்ளது. 

2020 ஜனவரி முதல் CIABOC இன் பணிப்பாளர் நாயகமாக முன்னர் பணியாற்றிய திருவிஜேரத்னபுதிய ஊழல் எதிர்ப்புச் சட்டம் இயற்றப்பட்ட பின்னர் 2 ஏப்ரல் 2024 அன்று மீண்டும் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார். 

விஜேரத்னவின் நியமனம் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை மீறுவதாகவும்நடைமுறை நியாயம் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததாகவும் TISL இன் மனு வாதிடுகிறதுஇந்த நியமனத்தை இரத்து செய்யுமாறும் அல்லது விஜேரத்னவை நீக்கிவிட்டு சட்டத்திற்கு உட்பட்டு புதிய பணிப்பாளர் நாயகம்  ஒருவரை நியமிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும் TISL உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதுமேலும்திருவிஜேரத்ன CIABOC இன் பணிப்பாளர் நாயகம் ஆவதற்குரிய அனைத்து சட்டரீதியான நிபந்தனைகளையும் தகுதிகளையும் பூர்த்தி செய்யவில்லை என்றும் இம்மனு வாதிடுகிறது. 

மனுவில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர்அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள்அரசியலமைப்புப் பேரவையின் பொதுச் செயலாளர்தலைவர்ஆணையாளர்கள், CIABOC இன் பணிப்பாளர் நாயகம்  மற்றும் பணிப்பாளர் நாயகம்  பதவிக்குப் பட்டியலிடப்பட்ட வேட்பாளர்கள் என்போர் உள்ளடங்குகின்றனர்.   

பொது நலன் கருதி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுநமது நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மனுவின் விசாரணை மற்றும் இறுதித் தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில்பணிப்பாளர் நாயகமாக விஜேரத்ன செயற்படுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்குமாறு TISL உயர் நீதிமன்றத்திடம்  கோருகிறது. 

இவ்வாறான முறையற்ற நியமனங்களைத் தொடர அனுமதிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் நற்பெயருக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை TISL நிறுவனமானது சுட்டிக்காட்டியுள்ளது.   நடைமுறைச் சீர்கேடுகள் தடையின்றி நீடிக்க அனுமதிப்பதன் மூலம் சாத்தியமான பொருளாதார மற்றும் நற்பெயர் சார் விளைவுகளைக் குறிப்பிடுகிறது. இந்தப் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்ப்பதற்கும்தவறுகளை ஒழுங்குபடுத்துவதற்கும்திருத்துவதற்கும் தவறினால்ஊழல் எதிர்ப்பு முயற்சிகளின் நம்பகத்தன்மைபொருளாதாரம் மற்றும் சர்வதேச நற்பெயரை எதிர்மறையாக பாதிக்கும் என்று மனு வலியுறுத்துகிறது. 

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனமானதுசட்டப்பூர்வ தீர்வுகளைத் தேடுவதோடுபணிப்பாளர் நாயகம் பதவிக்கான எதிர்கால நியமனங்களுக்கான தெளிவான மற்றும் வெளிப்படையான வழிகாட்டுதல்களை நிறுவுமாறு அரசியலமைப்புப் பேரவை மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவை  கோருகிறது. 

  மனுவை இங்கே பார்வையிடலாம்.

Leave a comment

This website uses cookies to improve your web experience.